ஏற்கெனவே கரோனாவினால் நிலைகுலைந்து போயுள்ள அமெரிக்காவில் இதாஹோ என்ற மேற்கு மாகாணத்தில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.
ரிக்டர் அளவுகோலில் இது 6.5 என்று பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வலுவான நிலநடுக்கம் மாகாணம் முழுதும் எதிரொலித்துள்ளது. செவ்வாய் மதியம் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
20 முதல் 30 விநாடிகள் வரை கட்டிடங்கள், வீடுகல் குலுக்கியதில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பூகம்பத்தின் மையம் ஒரு தொலைதூர மலைப்பகுதியில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு உயிரிழப்புகளோ சேத விவரங்களோ இதுவரை வெளியாகவில்லை.
இந்த பூகம்பம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதில் அருகில் உள்ள 6 மாகாணங்களிலும் உணரப்பட்டது. நெவாடா, மொண்டானா பகுதிகள் உட்பட 6 மாகாணங்களில் உணரப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் 1983ம் ஆண்டு பெரிய பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago