சீனாவில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “சீனாவில் கரோனா வைரஸ் தொற்று புதிதாக 48 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் இறந்துள்ளார்.
சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,305 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 81,518 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2,000க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸிலிருந்து சீனா படிப்படியாக மீண்டு வருகிறது. இதனைத் தொடந்து அங்கு ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
» ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சமுத்திரக்கனி! தேவையா இந்தக் காழ்ப்பு?
» 144 தடை உத்தரவு மீறல்: சென்னையில் 589 வழக்குகள் பதிவு; 686 வாகனங்கள் பறிமுதல்
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
4 days ago