கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஸ்பெயினில் இறுதி சடங்கு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் அரசு வெளியிட்ட அறிக்கையில், “ ஸ்பெயினில் பிரார்த்தனை கூட்டங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு தடை விதிக்கப்படுகிறது இறுதி சடங்குகளில் மூன்று பேருக்குமேல் கலந்து கொள்ள கூடாது. மேலும் 2 மீட்டர் இடைவெளியில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஸ்பெயினில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவசர நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 87,000க்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago