கரோனா வைரஸ் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் இத்தாலி:  11 ஆயிரத்தையும் தாண்டியது உயிரிழப்பு; ஒரு லட்சத்துக்கும மேற்பட்டோர் பாதிப்பு

By ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸின் கிடுக்கிப்பிடியில் சிக்கி வரும் இத்தாலியில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணி்க்கை 1,01,179 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் நோயாளிகள் இத்தாலியில் உள்ளனர்.

இதில் ஆறுதல் அளி்க்கும் விஷயம் என்னவென்றால் நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் கரோனா நோயிலிருந்து 1,590 பேர் குணமடைந்தனர். கடந்த காலங்களில் இல்லாத நல்ல முன்னேற்றமாகும்.

இதுநாள்வரை சராசரியாக நாள்தோறும் 812 பேர் உயிரிழந்து வந்த நிலையில், நேற்று உயிரிழப்பு குறைந்து 756 ஆகப் பதிவானது என்று மக்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தள்ளது.

மக்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஏஞ்சலோ போரேலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

இத்தாலியில் இதுநாள் வரை நாள்தோறும் 812 ேபர் சராசரியாக உயிரிழந்த நிலையில் முதல் முறையாக உயிரிழப்பு குறைந்து 756 ஆக நேற்றுப்பதிவானது. 1,648 ேபர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 981 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். 27 ஆயிரத்து 795 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு அது உறுதியான 43 ஆயிரத்து 752 பேர் அதாவது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கையில் 58 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன.

இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் இத்தாலியில் மெல்ல கரோனா வைரஸின் பிடியிலிருந்து மீண்டு வருகிறது, 1,590 பேர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்துள்ளனர், இதன் மூலம் 14 ஆயிரத்து 620 ேபர் குணமடைந்துள்ளனர்.
இத்தாலியில் கரோனா வைரஸால் குணமடைந்தவர்களில் அதிகபட்சம் இதுவாகும்.

இத்தாலியில் இதுவரை அதிகமாகப் பாதிக்கப்பட்டது லோம்பார்டி மண்டலமாகும் அங்கு, இன்னும் 25 ஆயிரம் பேர் கரோனாவில் இருந்து மீளவில்லை, எமிலியா ரோமாக்னா மண்டலத்தில் 10,766 பேர், வெனிடோவில் 7,564 பேர், பிட்மோன்ட்டில் 7,655 பேர் கரோனாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேசமயம், லம்பார்டி மண்டலத்தில் புதிதாக கரோனா வைரஸால் பாதி்க்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது. கடந்த சிலநாட்கள் வரை 1,592 பேர் சராசரியாக பாதி்க்கப்பட்ட நிலையில் நேற்று 1,154 ஆகச் சரிந்துள்ளது. இருப்பினும் லோம்பார்டி மண்டலத்தில் உயிரிழப்பு 6,818 ஆக இருக்கிறு, நேற்று மட்டும் 458 ேபர் உயிரிழந்தனர்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இருந்த மருத்துவர்களும் இதில் இறந்துள்ளனர் நேற்று 11 மருந்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவுக்கு பலியான மருத்துவர்கள் எண்ணக்கை 63ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 8,358 சுகாதாரப் பணியாளர்கள், அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு ஏஞ்சலோ தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

மேலும்