கரோனா வைரஸ்: கதறுகிறது ஸ்பெயின்- 24 மணி நேரத்தில் 812 பேர் மரணம் ; பலி எண்ணிக்கை 7,340 

By பிடிஐ

மேட்ரிட்: கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் கொரோனா வைரஸுக்கு 812 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் மரணித்தவர்கள் எண்ணிக்கை 7,340 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் 24 மணி நேர பலி எண்ணிக்கை பிற நாட்களை ஒப்பிடும் போது இது குறைவே என்கிறது ஸ்பெயின் சுகாதாரத் துறை. ஞாயிறன்று 838 பேர் ஸ்பெயினில் கரோனாவுக்கு மரணமடைந்தனர்.

ஸ்பெயினில் கரோனா வைரஸ் உறுதி நோயாளிகள் எண்ணிக்கை 85,195 ஆக அதிகரித்துள்ளது ஒருநாளில் 8% அதிகரித்துள்ளது. நோய்வாய்ப்படுதல் குறைந்துள்ளதால் கரோனா அதன் இறுதிக் கட்டத்தை எட்டுகிறது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மார்ச் 14ம் தேதி முதலே கிட்டத்தட்ட ஸ்பெயின் நாடே முழு அடைப்பில் சென்றுள்ளது.

அடுத்த 2 வாரங்களுக்கும் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் பெட்ரோ சான்சேஸ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு உலகம் முழுதும் 735,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,804 பேர் இறந்துள்ளனர். குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 156,122 ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்