கரோனா வைரஸ் பாதிப்பு: ஊரடங்குக்குத் தயாராகும் ரஷ்யா

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கரோனா வைரஸ் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க அனைத்து மாகாணங்களும் தயாராகி வருகின்றன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை கோவிட்-19 காய்ச்சலால் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 1,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பின் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவுக்கு ரஷ்யாவின் மாகாணங்கள் தயாராகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அனைத்துக் கடைகள் ( விடுதிகள், காபி ஷாப்) என அனைத்தும் மூடப்படும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ஆனால், உணவகங்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டவும், தங்கள் செல்லப்பிராணிகளை அழைத்து வெளியே வரவும் ரஷ்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, ரஷ்யர்கள் கடந்த வாரம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும் அதற்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்