இத்தாலியில் ஒரேநாளில் 756 பேர் பலி; ஒரு லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

By செய்திப்பிரிவு

இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,689 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவ ஆய்வுப் பல்கலைகழகம் வெளியிட்ட அறிக்கையில், “இத்தாலியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,689 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 756 பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 10,779 ஆக அதிகரித்துள்ளது.

13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து திரும்பியுள்ளனர். 3,000 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இத்தாலியில் லோம்பார்டி பகுதிதான் கோவிட்-19 காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறியப்படுகிறது. கோவிட் காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருப்பதால், அங்கு ஊரடங்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

46 mins ago

உலகம்

1 hour ago

உலகம்

6 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்