இலங்கையில் கரோனா வைரஸுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் சுகாதாரத் துறை சேவை அமைப்பின் இயக்குனர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து இலங்கையின் சுகாதாரத் துறை சேவை அமைப்பின் இயக்குனர் அனில் ஜெயசிங்கே கூறும்போது, ''இலங்கையில் கோவிட்- 19 காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வந்த 65 வயதான நபர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். மரணமடைந்த நபருக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட்-19 காய்ச்சல் தொற்று சுமார் 115 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது.
கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
» பிரான்ஸில் 37,575 பேர் கரோனா வைரஸால் பாதிப்பு
» மலேசியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago