ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இதன் மூலம் கரோனா வைரஸால் பலியான முதல் அரச குடும்ப நபர் இவர் ஆவார்.
கோவிட்-19 காய்ச்சலுக்கு ஸ்பெயினில், கடந்த 24 மணிநேரத்தில் 832 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஸ்பெயினில் கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,690 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஸ்பெயினின் இளவரசி மரியா தெரசா (86) கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.
1933 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி பிறந்த மரியா தெரசா, பிரான்ஸில் பட்டப்படிப்பை முடித்தவர். அவர் தனது வெளிப்படையான பேச்சால் அனைவராலும் பாரட்டப்பட்டவர்.
» பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு 1,500 ஆக அதிகரிப்பு
» அமெரிக்காவுப் பரிசாக வழங்கப்பட்ட 72 வயது இந்திய யானை; வன உயிரினக் காப்பகத்தில் கருணைக் கொலை
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago