இத்தாலியில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி அரசுத் தரப்பில், “இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 889 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியில் 92,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தாலியில் இதுவரை கோவிட்-19 காய்ச்சல் காரணமாக 51 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோவிட் காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருப்பதால், அங்கு ஊரடங்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.
» என்னதான் நடக்கிறது? கரோனா வைரஸால் கலங்கும் உலக மக்கள்: ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
» கரோனா வைரஸ் : அமெரிக்காவில் பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது; கரோனா மையமானது நியூயார்க் நகரம்
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட் 19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago