'விரைந்து குணமாகுங்கள்; கரோனாவுக்கு எதிராகப் போராடுவோம்'- பிரிட்டன் பிரதமருக்கு ட்ரம்ப் வாழ்த்து

By செய்திப்பிரிவு

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, விரைந்து குணமாகுங்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், ஆசிய, ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பாரபட்சம் இல்லாமல் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் விரைந்து குணமாக போரிஸ் ஜான்சனுக்கு, ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் விரைந்து குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். அதேபோல இருவரின் நெருக்கமான நட்புக்கு நன்றி தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் ஜி7, ஜி20 மற்றும் சர்வதேச கூட்டமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு கரோனா வைரஸை முறியடிக்க முன்வந்துள்ளனர். இதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து முன்னெப்போதையும் விட வலிமையுடன் செயல்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியப் பிரதமர் மோடியும் போரிஸ் ஜான்சன் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்