கரோனா வைரஸ் நோயை எதிர்கொண்டு மீள 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர்கள் உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர்கள் தொகையை உதவியாக அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் 100 மில்லியன் டாலர்கள் உதவியை ஏற்கெனவெ அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
இந்தியாவுக்கான 2.9 மில்லியன் டாலர்கள் உதவியானது இந்தியாவில் சோதனைக்கூடங்களை அமைக்கவும் கரோனா தொற்றைக் கண்டுபிடிக்கவும் நிகழ்வு தொடர்பான கண்காணிப்பைச் செய்யவும் தொழில்நுட்பரீதியான நிபுணர்களுக்கான உதவியாகவும், தயாரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பன்னாட்டு வளர்ச்சித் துறை உதவி நிர்வாகி போனி கிளிக் என்பவர் கூறும்போது, “பொதுச்சுகாதாரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. நோய் பாதிப்பில் அதிகம் பாதிக்கப்படுவோர் மீதான அக்கறையில் அமெரிக்கா பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. சுகாதார நிறுவனங்களை கட்டமைத்து சமுதாயங்கள் மற்றும் நாடுகளிடையே நிலைத்தன்மையை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
தெற்காசியாவில் 1 மில்லியன் டாலர்கள் சுகாதார நிதியுதவியை அமெரிக்கா அளித்துள்ளது, எதிர்கால கொள்ளை நோய் தொற்று மற்றும் பரவலைத் தடுக்கவும், தயாரிப்புகளில் ஈடுபடவும் இந்த நிதியுதவியை அமெரிக்கா வழங்கி வருகிறது.
இலங்கைக்கு 1.3மில்லியன் டாலர்கள்
நேபாளத்திற்கு 1.8 மில். டாலர்கள்
பங்களாதேஷுக்கு 3.4 மில்லியன் டாலர்கள்
ஆப்கானிஸ்தானுக்கு 5 மில்லியன் டாலர்கள்
தொகையினை கரோனா தடுப்புக்காக அமெரிக்கா வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago