உலகின் பெரும்பாலான நாடுகள் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் இத்தாலியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 969 பேர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் அவசரநிலைக்கான ஆணையர் டோமினிக்கோ அர்குரி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இத்தாலியில் இன்று ஒரே நாளில் கரோனா வைரஸுக்கு 969 பேர் பலியாகியுள்ளார்கள், இதுநாள்வரை ஒரேநாளில கண்டிராத உயிரிழப்பாகும். அதேசமயம் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து 589 பேர் சென்ற நிலையில் புதிதாக 4,401 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 86 ஆயிரத்து 498 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதில் ஆக்டிவ் கேஸ் மட்டும் 66ஆயிரத்து 414 பேர் இருக்கின்றனர். 6 சதவீதம் பேர், அதாவது 3,732 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர். கரோனாவாலிருந்துஇதுவரை 10 ஆயிரத்து 950 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய தொற்றுநோய் பிரிவு புள்ளிவிவரங்கள் படி, நாட்டில் 6,414 மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக 49 வயது நிரம்பியவர்கள் பாதி்க்கப்படுகின்றனர், இதில் 35 சதவீதம்பேர் ஆண்கள்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் என்பது உலகளாவிய சிக்கல், இதை அனைத்து நாடுகளும் கூட்டுறவுடன், ஒற்றுமையுடன் எதிர்கொண்டு வெல்ல வேண்டும். கர்வம், நீ பெரியவனா நான் பெரியவனா என்ற மனநிலையில்லாமல் இதில் உதவவேண்டும்.
பல்வேறு நாடுகளில் இருந்து மக்களுக்கு உயிர்காக்கும் கருவிகளை, மருந்துகளை நாங்கள் வாங்கி வருகிறோம் பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்று வருகிறோம்.
அரசியல் ரீதியாக, பூகோள ரீதியாக வேறுபட்டு இருந்தாலும், ஒற்றுமையாக இருப்பதற்கும், கூட்டுறவோடு பணியாற்றுவதற்கும் இதுதான் சரியான நேரம் இதுவாகும். எங்கள் மக்களின் பிரச்சினைகளைத் தீ்ர்க்க எங்கெல்லம் தீர்வு கிடைக்கிறதோ அங்கு செல்கிறோம்
இவ்வாறு அர்குரி தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago