இத்தாலியில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்த 101 வயது முதியவர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பாதிப்படைந்த 101 வயது முதியவர் ஒருவர், இத்தாலியில் குணமடைந்தார்.

கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் ஐரோப்பிய நாடான இத்தாலி பெரும் உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. இத்தாலியில் மட்டும் கோவிட் காய்ச்சலுக்கு 8,000 பேர் வரை பலியாகியுள்ளனர். இத்தகைய மோசமான இறப்பு விகிதத்துக்கு அங்கு முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 101 வயதான முதியவர் ஒருவர் கோவிட் காய்ச்சலிலிருந்து குணமடைந்ததாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊடகங்களால் மிஸ்டர் ’பி’ என்று குறிப்பிடப்படும் அந்த நபர் இத்தாலியில் 1919 ஆம் ஆண்டு பிறந்தவர். ரிமினியில் உள்ள மருத்துவமனையில் கோவிட் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது குணமடைந்துள்ளார். இதனை ரிமினி பகுதியின் துணை மேயர் குளோரியா லிசி உறுதிப்படுத்தியுள்ளார்

இதுகுறித்து லிசி கூறும்போது, “கோவிட் காய்ச்சலில் இருந்து குணமடைந்த நபரிடமிருந்து அனைவருக்குமான எதிர்கால நம்பிக்கையை உணர்கிறோம். இந்த வாரம் ஏராளமான சோகமான செய்திகளைப் பார்த்து வந்தோம். அதுவும் வயதானவர்களிடமும் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் குணமடைந்துள்ளார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்