கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு சுமார் 5,32,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,090 பேர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்து கோவிட்-19 காய்ச்சலால ஐரோப்பா கண்டம் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது.
ஐரோப்பாவில் சுமார் 2,50,000 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. இத்தாலியில் மட்டும் கோவிட்-19 காய்ச்சலுக்கு 7,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
» கேரளா: ஆல்கஹால் என்று நினைத்து சானிட்டைசரைக் குடித்த கைதி மரணம்
» கரோனாவுக்கு எதிரான போர்: இந்தியாவில் உயிரிழப்பு 17; பாதிக்கப்பட்டோர் 724 ஆக அதிகரிப்பு
இத்தாலிக்கு அடுத்து அதிகமான பாதிப்பு ஸ்பெயினுக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
7 mins ago
உலகம்
10 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago