பொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள் என்று உலக நாடுகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ''பெரும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும். இதன் மூலம் கரோனா தொற்று நோயால், உலகமே மந்தகதியில் உள்ள சூழலில், உலகின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.
உலகளாவிய சந்தையுடைய விநியோகச் சங்கிலியின் ஸ்திரத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்'' என்று ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜி20 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீன உறுப்பினரிடம் கட்டணங்களைக் குறைத்தல், தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் ஆகியவற்றை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
» கரோனா வைரஸ்: இத்தாலி, சீனாவைக் கடந்த அமெரிக்கா : 83,000 பேருக்கு கோவிட்-19 ‘பாசிட்டிவ்’
''இறக்குமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகப்படுத்தவும் சார்பு நிதிக் கொள்கையை அமல்படுத்த ஊக்குவிக்கவும் சீனா தயாராக உள்ளது'' என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
43 mins ago
உலகம்
11 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago