கரோனா வைரஸ் பாதிப்பு: இராக்கிலிருந்து ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் பிரான்ஸ்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இராக்கிலிருந்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கோவிட் -19 காய்ச்சலுக்கு பிரான்ஸ் நாடும் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. பிரான்ஸில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 25,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கோவிட்-19 காய்ச்சல் காரணமாக பிரான்ஸ் அரசு பெரும் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் இராக்கிலிருந்து தங்கள் நாட்டுப் படைகளைத் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில் , “இராக் அரசு ஒத்துழைப்புடன் பிரான்ஸ் ராணுவ வீரர்களைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்