அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆங்காங்கே இந்திய மாணவர்கள் பலர் சிக்கித்தவித்து வருகின்றனர், அவர்களை மீட்டு இலவச உணவு, இலவசத் தங்குமிடம் அளிக்க இந்திய-அமெரிக்க விடுதியாளர்கள் முன்வந்துள்ளனர்.
இந்தியாவும் லாக்-டவுன் காரணமாக் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது, மேலும் அமெரிக்காவில் மாணவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டலிலிருந்தும் காலி செய்ய உத்தரவிடபட்டுள்ளது, இதனால் இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 700 ஹோட்டல்களில் 6,000 அறைகள் இவர்களுக்க்காக இலவசமாக உணவுடன் ஒதுக்கப்படுவதாக அங்குள்ள இந்திய-அமெரிக்க விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 2,50,000 இந்திய மாணவர்கள் உள்ளனர், இந்திய தூதரகம் 24 மணி நேர உதவி அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு உதவ முன் வந்த பல ஹோட்டல்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு அருகிலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அமெரிக்க விடுதி உரிமையாளர்களின் இந்தச் செயலைப் பாராட்டி இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து கூறும்போது, “இத்தகைய உதவி இதயத்தை இளகச் செய்கிறது. இப்படித்தான் ஒன்றிணைந்து கரோனாவை முறியடிக்க முடியும்” என்றார்.
இவர்களெல்லாம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உலகிற்கும் நன்மை செய்யும் வருங்கால சி.இ.ஓ.க்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகவே இவர்களுக்கு உதவுவதில் எங்களுக்கு பெரிய பெருமை இருப்பதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தூதரகப் பரிந்துரைகளின் பேரில் ரூன்கள் ஒதுக்கப்படுகின்றன. நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம்தன் இதற்கு முதல் முன்னெடுப்பைச் செய்தது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக கரோனா தடயம் மூலம் வெளியாகும் செய்தி என்னவெனில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,031 ஆக அதிகரித்துள்ளது, 68,752 உறுதி செய்யப்பட்ட கரோனா கேஸ்கள் உள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago