இத்தாலியில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 6,820 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 700க்கும் அதிகமானவர்கள் பலியானதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலியின் சிவில் அமைப்பு கூறும்போது, “இத்தாலியில் கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 காய்ச்சலால் இத்தாலியில் பலியானவர்கள் எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 69,176 பேர் கோவிட் 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 23,783 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 19,846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ல்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் மிகப் பெரும் பாதிப்பை சீனாவுக்கு அடுத்து இத்தாலி எதிர்கொண்டுள்ளது.

இத்தாலி மருத்துவர்கள் இரவு, பகலாக கரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கரோனாவால் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ள இத்தாலிக்கு உதவும் வகையில் மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் கியூபா அனுப்பியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்