5 ஆயிரம் பேர் சென்ற கப்பலின் 3 அமெரிக்க மாலுமிகளுக்கு கரோனா

5 ஆயிரம் பேர் சென்ற அரசுக் கப்பலின் 3 அமெரிக்க மாலுமிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 10,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 150 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இதற்கிடையே அமெரிக்காவின் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பற்படை கப்பல் கடந்த வாரம் இயங்கியது. இதில் பயணித்த 3 மாலுமிகளுக்கு தற்போது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கப்பற்படை செயலாளர் தாமஸ் மாட்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சம்பந்தப்பட்ட 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

15 நாட்களுக்கு முன் கப்பற்படை கப்பல் வியட்நாம் துறைமுகத்தில் இருந்தது. எனினும் எங்கிருந்து கரோனா பரவியிருக்கும் என்று தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் எடுக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை கப்பற்படையில் 86 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE