பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் சுகாதார மையம் தரப்பில், “பாகிஸ்தானில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் இதுவரை 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. சுமார் 410 பேர் அங்கு கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பிற மாகாணங்களிலும் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது. 7 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்து வருகிறார். வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் உள்ளூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
» கரோனா பாதிப்பு ஈரானிலிருந்து அழைத்து வரப்பட்ட 277 இந்தியர்கள்: ஜோத்பூர் ராணுவ மையத்தை அடைந்தனர்
» இந்தூரில் 5 பேருக்கு கரோனா ‘பாசிட்டிவ்’ உறுதி: மத்தியப் பிரதேச பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
சிந்து மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை என்றும், மக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருக்க வேண்டு என்றும் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago