இத்தாலியில் தற்போது கரோனா வைரஸுக்குப் பதிவு செய்யப்படும் எண்ணிக்கையை விட, பாதிப்பு இன்னும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் மிகப் பெரும் பாதிப்பை சீனாவுக்கு அடுத்து இத்தாலி எதிர்கொண்டுள்ளது. இங்கு கோவிட் (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை 6,077 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 63,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 23,783 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 19,846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிட் காய்ச்சலால் தற்போது பதிவு செய்யப்படும் எண்ணிக்கையை விட பாதிப்பு இன்னும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று இத்தாலி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» கரோனா தொற்று; வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு உதவி:சத்யா நாதெள்ளா குடும்பம் ரூ.2 கோடி நிதியுதவி
» கரோனா முன்னெச்சரிக்கை; கொல்கத்தா மருத்துவமனையில் மம்தா பானர்ஜி திடீர் ஆய்வு
சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ போரேலி கூறும்போது, “10-ல் ஒருவருக்கு தொற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தால் இத்தாலியில் சுமார் 6 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸுக்கு) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago