கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 14,652 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பெரும் பாதிப்பை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கோவிட் காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தரப்பில், “ உலகம் முழுவதும் 190 நாடுகளில் பரவியுள்ள கோவிட்-19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14,652 . சுமார் 3,34,981 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் சீனாவில் கோவிட்-19 காய்ச்சல் தொற்று சற்று தணிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் ஈடுபட்ட சீன மருத்துவர்கள் பலர் மற்ற நாடுகளில் உள்ள மருத்துவர்களுக்கு நேரடியாக உதவியளித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
3 days ago