உலக நாடுகள் பலவற்றில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வரும் நிலையில் ரஷ்யாவில் மட்டும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் மக்கள்தொகை 14.6 கோடியாக உள்ளது. மேலும் சீனாவுடன், சுமார் 4,200 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட எல்லைப் பரப்பைக் கொண்டுள்ளது. ஆனாலும் கூட, ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதிப்பு மிக குறைவாக உள்ளது. ரஷ்யாவில், இதுவரை 306 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2-வது நாடு
உலகிலேயே, கரோனா வைரஸ் குறைவாக பதிவாகியுள்ள இரண்டாவது நாடு ரஷ்யா ஆகும். முதலாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. அங்கு 0.11% என்ற அளவில் பாதிப்பு இருந்தது.
இதுவரை ரஷ்யாவில் 133,101 பேருக்கு கரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே ரஷ்ய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அங்கு நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
ஜனவரி 30-ம் தேதிக்கு முன்னதாக சீனாவுடனான அதன் 4,200 கிலோமீட்டர் தூர எல்லையை ரஷ்யா மூடிவிட்டது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களையும் அமைத்தது.
முன்கூட்டியே சோதனை
புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா மார்ச் மாத தொடக்கத்தில் மட்டுமே கரோனா வைரஸ் சோதனையின் வேகத்தை அதிகரித்தது. அதே நேரத்தில் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து விமான நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில், ஈரான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பயணிகளை இலக்கு வைத்து, அவர்களிடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் அந்த நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது என்று அந்நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரஷ்யாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) பிரதிநிதி டாக்டர் மெலிடா உஜ்னோவிக் கூறியதாவது:
“ரஷ்யா உண்மையில் ஜனவரி மாத இறுதியிலேயே தனது கெடுபிடிகளை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். சோதனையை தாண்டி ரஷ்யா பரந்த அளவிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது. இதனால் இந்த கொடிய வைரஸ் பரவுவதுகட்டுப்படுத்தப்பட்டது. பரிசோதித்தல் மற்றும் அடையாளம் காணுதல், தொடர்புகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், இவை அனைத்தும் டபிள்யூஎச்ஏ தெரிவித்த விதிமுறைகளின்படி ரஷ்யாவில் நடந்தது.” இவ்வாறு உஜ்னோவிக் கூறினார்.
இந்நிலையில் வரும் மே 1-ம் தேதி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் அனுமதியை ரஷ்ய அரசு மறுத்துள்ளது. மாஸ்கோவில், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மேலும் நகரத்தை முடக்குவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago