ஸ்மார்ட் போன் வழியாக பாதிரியர் மூலம் இறுதி பிரார்த்தனை: 10 நிமிடத்தில் உயிர் பிரிந்த சோகம்- தொடரும் கரோனா துயரம்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்த அமெரிக்கருக்கு ஸ்மார்ட்போன் வழியாக பாதிரியார் இறுதி மதபோதனை செய்துள்ளார். அதைக் கேட்ட 10 நிமிடங்களில் அவரின் உயிர் பிரிந்துள்ளது.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்தவர் பில் பைக். அவர் சமீபத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மைக்கின் நிலை மோசமானதை அடுத்து, அவர் இறுதியாக மதபோதனையைக் கேட்க விரும்பினார். அவரைக் கவனித்து வந்த செவிலியர் ஸ்மார்ட் போன் மூலம் பாதிரியாரை அழைத்தார். பாதிரியாரும் பிரேயர் செய்ய, மைக் தனது கடைசிக் கட்டத்தில் மத போதனைகளைக் கேட்டு மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து 10 நிமிடங்களிலேயே மைக்கின் உயிர் பிரிந்தது.

இதைத்தொடர்ந்து பாதிரியார் கூறும்போது,''மைக்கிடம் 'உங்களை நேசிக்கிறேன்' என்று இறுதியாகத் தெரிவித்தேன். இதுதான் நான் முதல்முறையாக போன் வழியாக அளித்த இறுதிக்கட்ட மத போதனை.

கரோனா வைரஸின் விளைவுகள் அபாயகரமாக இருந்தாலும் சில விஷயங்கள், வியக்கத்தக்க வகையில் நம்பிக்கை அளிக்கின்றன'' என்று தெரிவித்தார்.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்காவையும் கதிகலங்க வைத்து வருகிறது. அமெரி்க்காவில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 419 ஆகவும், நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

மூன்றில் ஒரு அமெரிக்கர் வீட்டிலேயே முடங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE