பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு 800 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ”பாகிஸ்தானில் கோவிட் 19 (கரோனா வைரஸுக்கு) காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவிட் காய்ச்சல் பாதிப்புக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் குணமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் சிந்து மாகாணம்தான் கோவிட் 19 கடுமையான பாதிப்பை சந்திதுள்ளது. சிந்து மாகாணத்தில் சுமார் 352 பேரும், .பஞ்சாப் மாகாணத்தில் 225 பேரும் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸை தடுக்க உரிய நடவடிக்கைகளை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸுக்கு) இதுவரை உலகளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானொர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE