கரோனா வைரஸ் பாதிப்பு: ஈரான், வடகொரியாவுக்கு உதவ தயார் - அமெரிக்கா

கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 காய்ச்சல் (கரோனா வைரஸ் ) உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வைரஸ் பாதிப்புக்கு சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்பை அடைந்துள்ளன.

இந்த நிலையில் கோவிட் -1 9 காய்ச்சலால் பெரிதும் பாதிப்பை அடைந்துள்ள ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துவெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் பேசும்போதும், “ ஈரான் மற்றும் வடகொரியாவுக்கு உதவ எண்ணுக்கிறோம். இந்த நாடுகளுக்குமட்டுமல்ல கோவிட் -19 காய்ச்சலால் பாதிப்பை அடைந்து 140 நாடுகளுக்கு உதவ விரும்புகிறோம். நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. குறிப்பாக ஈரான். அந்நாடு கடுமையானபாதிப்பை சந்தித்து வருகிறது.

பொருளாதார ரீதியாக எங்களால் தற்போது உதவ முடியாது. முதலில் எங்கள் நாட்டுக்கான தேவையை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரி்க்காவில் கோவிட் -19 காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 419 ஆகவும், நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸுக்கு) இதுவரை உலகளவில் 4 லட்சம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE