பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''பிரான்ஸில் சனிக்கிழமை நடந்த கணக்கீட்டின்படி கோவிட்-19 காயச்சலால் கடந்த 24 மணிநேரத்தில் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,459 ஆக அதிகரித்துள்ளது.
1,587 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட்- 19 காய்ச்சாலால் பாதிக்கப்பட்டவர்களில் 1,525 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கோவிட்-19 காய்ச்சலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் கோவிட் காய்ச்சலால் இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
தற்போதைய தகவலின்படி கோவிட் காய்ச்சல் காரணமாக உலகம் முழுவதும் 3,08,231 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago