உலக நாடுகள் முழுவதும் கரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான நிலையில், வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
வடகொரியா கிழக்கு கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) குறுகிய தூரம் சென்று இலக்கைத் தாக்கும் இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்த நிலையில் வடகொரியாவின் சோதனைக்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரியா ராணுவம் கூறும்போது, “கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலக நாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில், இது பொருத்தமற்றது. அவர்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் வடகொரியாவின் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், வடகொரியா இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, வடகொரியா ராக்கெட் ஏவுதளச் சோதனையில் இறங்கியுள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவுக்கும் அந்நாட்டு அதிபர் கிம்முக்கும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோவில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுதச் சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago