அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் மாகாணமான கலிபோர்னியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவிட் காய்ச்சலுக்கு அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 200 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 14,340 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேரின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் அந்நாட்டில் அதிக மக்கள் வசிக்கும் மாகாணமான கலிபோர்னியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாகாண ஆளுநர் கவின் நியூசம், கரோனா தொற்று காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
» கரோனா முன்னெச்சரிக்கை; அமைப்பு சாரா தொழிலாளர்கள் மீது அதிக கவனம் தேவை: கனிமொழி வலியுறுத்தல்
» கரோனா அச்சுறுத்தல்.. நீங்களே மக்களவைக்கு வருவதில்லை: மோடிக்கு திரிணமூல் எம்.பி. எழுப்பிய கேள்வி
கலிபோர்னியாவில் 900 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 4 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
சீனாவில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago