பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலும் கரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஈரான் ஆன்மீக யாத்திரை சென்றவர்கள் மூலமாக தான் அந்நாட்டில் கரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.
» ம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பு: மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» மகாராஷ்டிராவில் கரோனா முன்னெச்சரிக்கை: புனேயில் கடைகளுக்கும் விடுமுறை
இதில் சிந்து மாகாணத்தில் 155 பேரும், கைபர் பக்துன்வாகா மாகாணத்தில் 15பேரும், பலுசிஸ்தானில் 10 பேரும், கில்ஜித்தில் 5 பேரும், இஸ்லாமாபத்தில் 2 பேரும் பஞ்சாபில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago