கர்ப்பம் தரித்த தாய் மூலம் குழந்தைக்கு கரேனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கர்ப்பம் தரித்த தாய் மூலம் குழந்தைக்கு கரேனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
» கரோனா வைரஸ் பாதிப்பு: இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 368 பேர் பலி
» ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக வரவேண்டாம்; தொலைக்காட்சியில் காணுங்கள்: வாடிகன் அறிவிப்பு
இதுகுறித்து ‘பிராண்டியர் இன் பீடியாஸ்ட்ரிக்ஸ்’ என்ற மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்ப்பமான தாயிடம் இருந்து பிறந்த குழந்தைக்கு கரேனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதுதொடரபாக கரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பம் தரித்த பெண்களை பரிசோதனை செய்தோம்.
4 பெண்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களது வயிற்றில் இருந்த குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை. குழந்தைகள் பிறந்த பிறகு அந்த குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சோதித்து பார்த்தோம்.
அப்போது அந்த குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். குழந்தைகள் சிறிய அளவில் சுவாசப் பிரச்சினை இருந்தது. எனினும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
10 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago