வாழைப்பழத்துக்காக மூர்க்கமாக சண்டையிட்ட குரங்குகள்

By செய்திப்பிரிவு

தாய்லாந்தில் ஒரு வாழைப்பழத்துக்காக நூற்றுக்கணக்கான குரங்குகள் மூர்க்கமாக சண்டையிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவிட் - 19 வைரஸ் மனிதக் குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், அது மறைமுகமாக விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இதன் விளைவாக உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இது, கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் என்றபோதிலும், பறவை மற்றும் விலங்கினங்களுக்கு மறைமுக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் உணவுக்காக திண்டாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே அமைந்துள்ள லோப்புரி பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள குரங்கு உள்ளிட்ட விலங்கினங்களுக்கு உணவுகளை வழங்குவர்.

இந்நிலையில், கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தலால் சில வாரங்களாக அங்கு சுற்றுலா பயணிகள் வருவதில்லை. இதனால் அங்குள்ள குரங்கு, அணில், முயல், நாய் முதலிய விலங்கினங்களும், பறவை இனங்களும் போதிய உணவு இல்லாமல் தவித்து வருகின்றன.

அந்த வகையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கடைக்கு முன்பு விழுந்து கிடந்த வாழைப்பழத்தை ஒரு குரங்கு வேகமாக எடுத்துச் சென்றது. இதனைக் கண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள் அந்த வாழைப்பழத்தை பறிப்பதற்காக அந்தக் குரங்கை துரத்தின. இவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட குரங்குகள் அந்தப் பகுதியில் குவிந்து ஒரு வாழைப்பழத்துக்காக ஒன்றுக்கொன்று மூர்க்கத்தனமாக சண்டையிட்டுக் கொண்டன.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்தும் பகிர்ந்தும் கருத்துகளை தெரிவித் திருந்தனர்.

மேலும், உலகமயமாதலின் கோர முகத்தை இந்த வீடியோ எடுத்துக்காட்டுவதாக சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்