தென் கொரிய முன்னாள் பிரதமருக்கு 2 ஆண்டு சிறை

By ஏபி

தொழிலதிபரிடமிருந்து சுமார் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றத் துக்காக தென்கொரிய முன்னாள் பிரதமர் ஹான் மியுங் சூக்-குக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு ஹான் மியூன் சூக்-குக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஹான் மியூன் சூக் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்முறையீட்டை நிரா கரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பே இறுதியா னது என்பதால் ஹான் மியூன் சூக் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

கடந்த 1970களில், அப்போதைய சர்வாதிகார அரசால், ஹான் மியூன் சூக் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கம்யூனிஸ ஆதரவு நடவடிக்கை குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், பின்னாட்களில் அவரின் பணி ஜனநாயக முயற்சி என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தென்கொரியாவில் பிரதமர் பதவி என்பது 2-வது உச்சபட்ச பதவி. ஆனால், இது வெறும் அலங்கார பதவிதான். அதிகாரம் முழுக்க அதிபரிடம் குவிந்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்