சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ், உலகின் 119 நாடுகளில் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக தனது வீட்டிலேயே தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 62 வயதான அவர் தற்போது குணமாகி வருவதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் அமைச்சர்
46 வயதான பிரான்ஸ் நாட்டு கலாச்சாரத்துறை அமைச்சர் பிராங்க் ரீஸ்டரும், கோவிட்-19 பாதிப்பு காரணமாக கடந்த 9-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் காண தனிமை வார்டுக்குச் சென்றபோது அவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் தனிமை வார்டில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பிரான்ஸ் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 5 எம்.பி.க்களுக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரான் அமைச்சர்
ஈரான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இராஜ் ஹரிர்சிக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஈரானைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் பதேமே ரபார், முகமது அலி ரமாசானி ஆகியோர் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இறந்துவிட்டனர். மேலும் 20 எம்.பி.க்கள் கோவிட்-19 பாதிப்பு காரணமாக தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி தலைவர்
இத்தாலி நாட்டிலுள்ள ஜனநாயக கட்சியின் தலைவர் நிக்கோலா ஜிங்காரீட்டி, கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கடந்த வாரம், வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டிலுள்ள வோக்ஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜேவியர் ஒர்டேகா ஸ்மித், கோவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு மாநாட்டில் பங்கேற்றபோது அவருக்கு தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதே நாட்டைச் சேர்ந்த மேலும் சில எம்.பி.க்களுக்கும் கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago