ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பேசிய வீடியோ ஒன்றின் திரிக்கப்பட்ட உள்ளடக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறு ட்வீட் செய்ததாக ட்விட்டர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
தவறான வழிநடத்தலுக்கும் புரிதலுக்கும் இட்டுச் செல்லும் ட்விட்டர் உள்ளடக்கங்களை கண்டுபிடித்து அகற்றும் புதிய கொள்கையினை ட்விட்டர் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பேசியதன் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து திரித்து வெளியிட்ட ஒரு வீடியோவை அமெரிக்க அதிபர் மறு ட்வீட் செய்ததாக ட்விட்டர் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகை சமூக ஊடக இயக்குநர் டான் ஸ்கேவினோ பதிவிட்ட இந்த ட்விட்டர் வீடியோவில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் கூட்டத்தினரை நோக்கி “நாம் மீண்டும் ட்ரம்ப்பைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்” என்ற கூறும் வாசகம் இடம்பெற்றிருந்தது.
» கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: 9 நாடுகளுக்கு விமானம், கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது சவுதி அரேபியா
» கரோனா பரவுகிறது: பிரதமர் மோடி பங்கேற்கும் முஜிப் நூற்றாண்டு விழாவை ஒத்திவைக்க வங்கதேசம் முடிவு
இந்த ட்வீட்டைத்தான் அதிபர் ட்ரம்ப் மறு ட்வீட் செய்ய அதனை சுமார் 60 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதெப்படி குடியரசுக் கட்சியின் பரம வைரியான ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், ‘ட்ரம்ப்பை மீண்டும் தேர்வு செய்வோம்’ என்று கூறுவார் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
ஆனால் பைடன் சொன்னதன் பிற்பகுதியை வெட்டி இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது ஜோ பைடன் பேசியது இதுதான், ““We can only re-elect Donald Trump if in fact we get engaged in this circular firing squad here,” என்றே கூறியுள்ளார். இதில் முதல் பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி வீடியோ திரிக்கப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு ட்விட்டர் நிறுவனம் இந்த பதிவில் “manipulated media” என்று சேர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago