கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான பெத்லகேம் தேவாலயம் மூடப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பில், "தெற்கு ஜெருசலேமில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் அமைந்துள்ள தேவாலாயம், கோவிட்-19 ( கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக இரு வாரங்களுக்கு மூடப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வர தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெத்லகேமில் 7 பேருக்கு கோவிட் - 19 ( கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பாலஸ்தீன அதிகாரிகள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
மேலும், பாலஸ்தீனத்தில் பள்ளிகளும், மசூதிகளும், ஓட்டல்களும் மூடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக கோவிட் காய்ச்சலால் இத்தாலியும் தென் கொரியாவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago