ஈரான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு அழைப்பாணை உத்தரவு பிறப்பித்ததையடுத்து ஈரான் நாட்டுத் தலைவர் அயத்துல்லா காமினி ‘முஸ்லிம்களைப் படுகொலை செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டுப் போகாமல் இருக்க வேண்டுமெனில் முஸ்லிம்களை படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அயத்துல்லா காமினி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீஃபும் பாகுபாடின்றி எல்லா குடிமக்களையும் நடத்துமாறு இந்தியாவுக்கு அறிவுறுத்தினார்.
“இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்க்கும் போது உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களின் இருதயங்கள் துயரத்தில் ஆழ்கின்றன. இஸ்லாமிய நாடுகளிடமிருந்து இந்தியா அன்னியப்பட்டு விடாமல் இருக்க வேண்டுமெனில் தீவிரவாத இந்துக்கள் மற்றும் இவர்களது அமைப்புகள், கட்சிகள் ஆகியவற்றிடமிருந்து இந்திய அரசு முஸ்லிம்களைக் காக்க வேண்டும், இந்த அமைப்புகளை, கட்சிகளை அடக்க வேண்டும்” என்று காமினி தன் அறிக்கையில் தெரிவித்தார்.
ஈரானில் இந்தியத் தூதரகம் முன்பாக பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் காமினியின் அறிக்கைக்குப் பதில் அளிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago