கோவிட்-19 காய்ச்சல் எதிரொலி- சீன அதிபரின் ஜப்பான் பயணம் தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சீனா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் கோவிட்-19 காய்ச்சல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஜப்பான் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த ஆண்டு ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்தார். அப்போது அரசுமுறைப் பயணமாக ஜப்பான் வருமாறு சீன அதிபருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட சீன அதிபர் ஜின்பிங் இந்த ஆண்டு வசந்த காலத்தில் (மார்ச் - மே) ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜப்பான் அரசின்முதன்மை கேபினட் செயலாளர்யோஷிஹிடே சுகா நேற்றுடோக்யோவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சீன அதிபரின் ஜப்பான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் ஏதுவான ஒரு நாளில் சீன அதிபர் ஜப்பான் வருவார். இது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும்.

கோவிட்-19 காய்ச்சல் பரவுவதை தடுப்பது இரு நாடுகளுக்கும் தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இப்பணிக்கு முதல் முன்னுரிமை அளிப்பது அவசியம்” என்றார்.

சீன அதிபர் இதற்கு முன் கடந்த 2008-ம் ஆண்டில் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றார்.

கோவிட்19 காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் 3,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்