ஈரானில் நாடாளுமன்ற உறுபினர்களில் 8 சதவீதம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஈரானில் கோவிட் - 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக இதுவரை 77 பேர் பலியாகி உள்ளனர். 2,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஈரான் நாடாளுமன்றத்தில் 8% பேர் கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்தமுள்ள 290 உறுப்பினர்களில்
23 பேர் கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ஈரானில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க சுமார் 54,000 கைதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை ஈரான் அரசு சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.
மேலும் ஈரானில் கோவிட் 19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டது. பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களும் மூடப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago