சிரியாவில் அரசுப் படை விமானங்கள் மீது துருக்கி தாக்குதல்

By செய்திப்பிரிவு

சிரியாவின் வடக்கு பகுதியில் அரசு கட்டுப்பாட்டு பகுதியில் துருக்கி படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

இதுகுறித்து சிரிய அரசு ஊடகம் கூறும்போது, “சிரியாவின் வடக்கு பகுதியில் அரசுப் படைகள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாரட் அல் நுமன் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சிரிய அரசின் போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது.” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இத்தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் சிரிய ராணுவம் மற்றும் இஸ்புல்லா அமைப்பின் அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பில் துருக்கி வான்வழி தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் துருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய ராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

முன்னதாக இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர்.

இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

மேலும்