பிரிட்டனின் ஹேம்ஷையர் பகுதியில் நேரிட்ட விமான விபத்தில் ஒசாமா பின்லேடன் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
பின்டேலனின் தந்தை முகமது பின் அவாத் பின்லேடன். ஏமன் நாட்டைச் சேர்ந்த அவர் 1910-ல் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்கு 10-க்கும் மேற்பட்ட மனைவிகளும் 50 பிள்ளைகளும் உள்ளனர். முகமது பின் அவாத் பின்லேடன் மறைவுக்குப் பிறகும் சவுதியில் அவரது குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஒசாமா பின்லேடனின் சித்தி ரஹா ஹசீம் பின் லேடன், அவரது மகள் சனா பின்லேடன், சனாவின் கணவர் ஹூகார் ஆகியோர் சொந்த விமானத்தில் இத்தாலியின் மிலன் நகரில் இருந்து பிரிட்டனின் ஹேம்ஷையர் நகருக்கு நேற்றுமுன்தினம் வந்தனர்.
அவர்களின் விமானம் பிளாக்புஸ்ஸி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்து நேரிட்டது. இதில் ஜோர்டானை சேர்ந்த விமானியும் பின்லேடன் குடும்பத்தினரும் உயிரிழந்தனர். மூவரின் மறைவுக்கு சவுதி அரேபிய மன்னர் குடும்பம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து பிரிட்டிஷ் விமானப் போக்குவரத்துத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
22 mins ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago