மத்திய மெக்சிகோவின் மைக்கோகன் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களில் 3000 சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய எரிமலை ஒன்று உருவாகி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விஞ்ஞானிகள் இதனை மறுத்து வருகின்றனர்.
கடந்த 100 ஆண்டுகளாக புதிய எரிமலை எதுவும் உருவாகாத போதும் நாட்டில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளை அதிகம் கொண்ட இடம் மைக்கோகன். இங்கு, அடிக்கடி ஏற்படும் நில அதிர்வால் குடியிருப்புகளுக்கு அருகே புதிய மாக்மா வளர்ந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புது அச்சுறுத்தலால் சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் இங்குள்ள பரிகியுடின் எரிமலை அருகே சுமார் 3,000 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜனவரி 5 முதல் ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 4.1 என்று பதிவாகும் எண்ணற்ற நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து அங்கு புதிய எரிமலை உருவாகலாம் என்ற நோக்கத்தில் ஆய்வாளர்கள் பலர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
நிலநடுக்கங்கள் பொதுவாக டெக்டானிக் என்ற கண்டத்தட்டுகள் நகர்வு நிகழ்வாக இருக்கலாம் அல்லது மேக்மா என்ற எரிகுழம்பு அல்லது கனல் அமைப்பு பூமிக்கு அடியில் கிடைக்கோட்டு மட்டத்திலோ, அல்லது செங்குத்தாகவோ நகருவதால் ஏற்படும். இதில் பெரிய அளவில் மேக்மா பூமியின் அடியிலிருந்து பொத்துக்கொண்டு மேலே வரும்போது எரிமலைகள் உருவாகின்றன. மிக்கோகனில் பரிகியுடின் எரிமலை இப்படித்தான் 1943-ம் ஆண்டு உருவானது.
ஆனால் விஞ்ஞானிகள் இந்த கடைசி 2 மாத நில அதிர்வுகளை புதிய எரிமலை உருவாக்கமாகக் கருதவில்லை. மாறாக பெரிய நிலநடுக்கம் ஒன்றிற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago