தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருகிறது என்று பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் ஐ.நா. சபை அலுவலகத்துக்கு வெளியே போஸ்டர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 43-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கவுன்சில் வளாகத்தில் இந்த போஸ்டரை பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினர் வைத்துள்ளனர். மேலும் தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக இயங்கும் பாகிஸ்தான் ராணுவம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜெனீவாவிலுள்ள ஒரு அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) சார்பில் இந்த போஸ்டரை அவர்கள் வைத்துள்ளனர்.
சர்வதேச தீவிரவாத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் உள்ளது என்றும், இதனால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த என்ஜிஓ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஆயுதம், பண உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வளாகத்தில் இந்த போஸ்டர் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago