தெரிந்து கொள்ளுங்கள்....40 ஆண்டுகாலத்தை போரிலேயே கழித்த ஆப்கானிஸ்தான்: முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

By பிடிஐ

ஆப்கானிஸ்தானின் கடந்த 40 ஆண்டுக்கால வரலாறு என்பது ஏவுகணைகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும், மனிதர்களின் குருதிகளையும், உடல்களையும் சுமந்து வந்த வரலாறு.

முதலில் சோவியத்யூனியன் ,பின்னர் தலிபான்கள், அல்கொய்தா, அமெரிக்கா என இந்த பேரின் ஆக்கிரமிப்புக்கும், அதிகார வேட்கைக்கும் இந்த நாட்டு மக்கள் தங்கள் அமைதியையும், உயிரையும் தியாகம் செய்துள்ளார்கள்.

கடந்த 1979-ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி சோவியத் யூனியனின் ரெட் ஆர்மி , ஆக்ஸஸ் ஆற்றைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தது. அதன்பின் சோவியத்யூனியுக்கு எதிராகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முஜாகிதீன் ஆகியோர் அமெரிக்க நிதியுதவியுடன் போரிடத் தொடங்கினார்கள். இங்கு தொடங்கிய போர் அதன்பின் நிற்கவே இல்லை.

ஆப்கானிஸ்தான் கடந்த 40 ஆண்டுகாலத்தில் கடந்து வந்த பாதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம்..........

1980- பாகிஸ்தான் சர்வாதிகாரி முகமது ஜியா உல் ஹக் மூலம் பணஉதவியும், ஆயுத உதவியும் அமெரிக்க சிஐஏ ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியது.

1983- அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், ஆப்கானிஸ்தான் முஜாகிதீன் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசினார்.(தலிபான்களை வளர்த்துவிட்டதே ஒருவகையில் அமெரிக்காதான்)

1986-(செப்) - ஆப்கானிஸ்தான் முஜாகிதீன்களுக்கு தேவையான ஆயுதங்களும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வழங்கியது. சோவியத் யூனியனுடன் பேச்சுவார்த்தை தீவிரமானது.

1987(ஜன)- ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ்ட் தலைவர் நஜிபுல்லா தேசிய மறுமலர்ச்சி திட்டத்தைக் கொண்டுவந்து, முஜாகிதீன்களை புதிய அரசில் பங்கேற்க அழைத்தார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.

1989- (பிப்15)- கடந்த 10 ஆண்டு ஆக்கிரமிப்புக்குப்பின் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற சோவியத்யூனியன் சம்மதித்தது.
1992(ஏப்ர)- முஜாகிதீன் படையினர் காபுலுக்குள் புகுந்து நஜ்புல்லாவை விடுவித்தனர். ஆனால் விமானநிலையம் வரும்போது அவர் சிறைபிடிக்கப்பட்டு ஐ.நா. முகாமில் தங்கவைக்கப்பட்டார்

1992-1996- முஜாகிதீனின் 7 பிரிவுகளுக்கு இடையே அதிகாரத்தைப் பகிர ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1994- முஜாகிதினின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தெற்கு காந்தகாரில் தலிபான் படையினராக உருவெடுத்தார்கள்

1996-செப்.26- கடுமையான சண்டைக்குப்பின் காபூல் நகரை தலிபான்கள் கைப்பற்றினர்.

1996-2001- தொடக்கத்தில் போரை முடித்துக்கொள்ள தலிபான்கள் ஒப்புதல் அளித்தனர். ஆனால், முல்லா ஓமர் தலைமையில் தலிபான்கள் ஆட்சி மிகக் கடுமையாக இருந்தது. தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றினர். பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது, கல்வி மறுக்கப்பட்டது

2000- தலிபான்கள் ஓபியம் போதைப்பொருட்கள் உற்பத்தியை ஒழித்தனர். இதனால் அந்த தொழிலில் இருந்த ஏராளமான மக்கள் ஏழைகளாகினர்

2001-மார்ச்: பாமியன் மாகாணத்தில் இருந்த மிகப்பெரிய புத்தர் சிலையை உடைத்தனர். இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

2001-செப்- பில்டேனை ஒப்படைக்குமாறு முல்லா ஓமருக்கு அமெரிக்க இறுதி கெடு விதித்தது.

2001, அக்7- அமெரிக்க கூட்டுப்படைகள், ஆப்கானிஸ்தானில் படையெடுத்தன

2001- நவ13- தலிபான்களிடம் இருந்து காபூலை அமெரிக்க கூட்டுப்படைகள் மீட்டு,தலைநகருக்குள் நுழைந்தன.

2001-டிச 7- காந்தகாரில் இரு்ந்து முல்லா ஓமர் விலகிச் சென்றபின், தலிபான் ஆட்சி சீர்குலையத்தொடங்கியது.

2001-டிச 22- காபுல் நகருக்கு கர்ஸாய் வருகை. ஆப்கானை நிர்வகிக்கும் 29 உறுப்பினர்களுக்கும் கர்ஸாய் தலைவராகப் பொறுப்பேற்பு

2004-2009- ஆப்கானில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு, அங்கு கர்ஸாய் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2014-ஏப்.5- ஆப்கானிஸ்தானில் நடந்த தேர்தலில் அஸ்ரப் கானி,அப்துல்லாஅப்துல்லா இருவரும் வெற்றி பெற்றவர்களா அறிவிக்கப்பட்டனர். அதன்பின் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேச்சுவார்த்தையில் அஷ்ரப் கானி அதிபராகவும், அப்துல்லா தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டனர்.

2015-2018- தலிபான்கள் மீண்டும் வலிமையாக உருவெடுத்து, நாள்தோறும் ஆப்கன் அரசுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் எதிராகத் தாக்குதல் நடத்தினர். கிழக்குப்பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் உருவாகியது, தலிபான்கள் பாதிக்கும் மேற்பட்ட நாட்டை கைப்பற்றினர்.

2018- செப்- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் வகையில் தலிபான்களுடன் பேச்சு நடத்த அமெரிக்க அதிகாரி ஜல்மே கலிஜாத்தை நியமித்தார்

2019 செப்- ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு பலமாதங்கள் முடிவு அறிவிக்கப்படவில்லை.

2019, நவம் 24- ஆப்கானிஸ்தான் சென்று அமெரிக்கப் படைகளை அதிபர் ட்ரம்ப் பார்வையிட்டார். தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

2020, பிப்18- ஆப்கானிஸ்தான் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அப்துல்லா தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவிட்டார்

2020, பிப்29- அமெரிக்கா, தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

29 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்