நவோமி கேம்பலுக்கு 6 மாதம் சிறை

By ஏஎன்ஐ

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மாடலும் நடிகையுமான நவோமி கேம்பலுக்கு (45) ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்னை பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்த நபரை தாக்கிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு நவோமியும் அவரது காதலரும், ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வரருமான விளாடிமிர் டோரோனின்னுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது புகைப்படக்காரர் ஒருவர் அவர்களை பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திர மடைந்த நவோமி, தனது கைப்பை யால் அவரை தாக்கினர். மீண்டும் அவர் பின்தொடர்ந்ததால் அவரை கையால் தாக்கினார். அப்போது நவோமியின் நகம் அந்த புகைப்படக்காரரின் கண்ணில் காயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த வழக்கு சிசிலி தீவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நவோமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்படமாட்டார். அடுத்த 6 மாதத்துக்கு நவோமி கண்காணிப்பில் இருப்பார். அந்த காலகட்டத்தில் அவர் இதேபோன்ற தவறை மீண்டும் செய்தால் சிறைத் தண்டனை உறுதியாகும்.



நவோமி கேம்பல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்