தென்கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,931 உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென் கொரியா நோய் தடுப்பு மையம் கூறும்போது, ”தென்கொரியாவில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) பாதிப்புக்கு இதுவரை 2,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் கோவிட் - 19 காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். சுமார் 27 பேர் கோவிட் 19 காய்ச்சல் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள டேகு நகரில்தான் கோவிட் 19 காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
» கரோனா பீதி: மக்களுக்கு நம்பிக்கையூட்ட சிக்கன் சாப்பிட்ட தெலங்கானா அமைச்சர்கள்
» கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்: உ.பி.யை பின்பற்றும் டெல்லி போலீஸார்
தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்து கோவிட் காய்ச்சலுக்கான பாதிப்பை ஈரானும், தென்கொரியாவும் எதிர் கொண்டுள்ளனர்.
ஈரானில் கோவிட் 19 காய்ச்சலுக்கு இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago