சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சனிக்கிழமையன்று சீனாவின் சுகாதார மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
"சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 31 மாகாணங்களில் இதுவரை 79 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,000-க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். 39 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையிலிருந்து பூரண குணமடைந்து திரும்பியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» அமெரிக்கா, தலிபான் இடையே இன்று அமைதி ஒப்பந்தம்
» ஐநா சபை கூட்டத்தில் இந்தியா ஆட்சேபம்: தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளிக்க கூடாது
சீனாவுக்கு அடுத்து கோவிட் -19 காய்ச்சலுக்கு அதிகம் பாதிப்பை மத்திய கிழக்கு நாடான ஈரான் அடைந்துள்ளது. ஈரானில் கோவிட் -19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காய்ச்சல் பாதிப்பு இதுவரை 388 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் 2,000-க்கும் அதிகமான நபர்களுக்கு கோவிட் -19 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago