ஈரான் துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிட் - 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் தரப்பில், “ஈரானின் கோவிட்-19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாகி வருகிறது. சுமார் 95 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர் கோவிட் -19 (கரோனா வைரஸ் ) காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர். ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் இராஜ் ஹரிர்ஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கோவிட்- 19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் இராஜ் ஹரிர்ஜி கூறும்போது, “ நானும் கோவிட்-19 (கரோனா வைரஸ் ) காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நேற்றிலிருந்து காய்ச்சல் இருக்கிறது. முதல் மருத்துவப் பரிசோதனையில் எனக்கு கோவிட்- 19 (கரோனா வைரஸ் ) காய்ச்சலால் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் குறித்த உண்மையை உலக நாடுகள் வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago