துருக்கி ராணுவம் தாக்குதல்: 50 சிரிய வீரர்கள் பலி

By செய்திப்பிரிவு

துருக்கி ராணுவ வீரர்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து துருக்கி ராணுவம் தரப்பில், “இட்லிப்பின் வடமேற்குப் பகுதியில் சிரியா நடத்திய தாக்குதலில் இரு துருக்கி ராணுவ வீரர்கள் பலியாயினர். 5 பேர் காயமடைந்தனர். சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கி தரப்பில் பதிலடி தரப்பட்டது. இதில் சிரிய வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகனின் தாக்குதலுக்குப் பிறகு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. ஆனால், அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் சிரியா - துருக்கி இடையே மோதல் வலுத்துள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், துருக்கி ராணுவம் எப்போது வேண்டுமானாலும் ஊடுருவலாம் என்று எர்டோகன் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்